தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் கொள்ளையை தடுத்த பெண் அலுவலர்களுக்கு விருது! - sand seized issue

வேலூர்: மணல் கொள்ளை விவகாரத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் துணிச்சலாக செயல்பட்ட பெண் அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பாராட்டி விருது வழங்கி கௌரவித்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்

By

Published : Oct 14, 2019, 9:00 PM IST

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பாலாற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதாக அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவேரிப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் திவ்யா, வாலாஜா, சோனியா ஆகியோர் தலைமையிலான குழுவினர் கடந்த இரண்டு தினங்களாக 36 மணி நேரம் இரவு பகலாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

வேலூர் வட்டாட்சியர் அலுவலர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

இந்தச் சோதனையில் 29 டிப்பர் லாரிகளில் மணல் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதில் சென்னைக்கு கடத்தப்படவிருந்த ரூ.31 லட்சம் மதிப்புள்ள 155 யூனிட் மணலை அலுவலர்கள் டிப்பர் லாரிகளுடன் பறிமுதல் செய்தனர். மணல் கொள்ளை விவகாரத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் துணிச்சலாக செயல்பட்ட பெண் அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பாராட்டி விருது வழங்கி கௌரவித்தார்.

மேலும் இவருடன் இணைந்து பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார். மேலும் பரிந்துரைக்கப்பட்ட 32 லட்சம் மதிப்புள்ள மணலை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கட்டடப் பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதையும் படியுங்க:

மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலரை கொல்ல முயற்சி! - 2 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details