வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் பி-கஸ்பாவில் 12-வது வாக்குச் சாவடிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலு பார்வையிட வந்திருந்தார். அப்போது அங்கிருந்த அதிமுகவினர் அமமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கார் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அதிமுக - அமமுக தொண்டர்களிடையே பெரும் தகராறு ஏற்பட்டது. இரு கட்சியினரிடையே ஏற்பட்ட தகராறை தடுக்க முயன்ற காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அப்பகுதி கலவர பூமிபோல் காட்சியளித்தது.
அமமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியம் கார் கண்ணாடி உடைப்பு- போலீசார் தடியடி. - vellore district
வேலூர்: ஆம்பூரில் அமமுக - அதிமுக தொண்டர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு மண்டை உடைந்தது.
![அமமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியம் கார் கண்ணாடி உடைப்பு- போலீசார் தடியடி.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3040841-thumbnail-3x2-ammkadmkfight.jpg)
அமமுக - அதிமுக தொண்டர்களிடையே தகராறு
அமமுக - அதிமுக தொண்டர்களிடையே தகராறு
மேலும், அதிமுக - அமமுகவினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.