வேலூர்: மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் (டிச. 31) அன்று இரவு வேலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் காரணமாக அனைவரும் வீட்டிலேயே அவரவர் குடும்பத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தமிழ்நாடு அரசினால் அறிவுறுத்தப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வரும் புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும் சாலையோரங்களிலும் பூங்கா மற்றும் அதனை போன்ற இடங்களிலும் கூட்டம் கூடுவதையும், இருசக்கர வாகனங்களில் சுற்றுவதும் தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.