தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில் வேலூரில் நேற்று (செப். 22) தொற்று பாதிப்பு 100-க்கு கீழ் சரிந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக மேலும் 118 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் 14 ஆயிரத்தை கடந்த கரோனா தொற்று - Vellore Latest News
வேலூர் : புதியதாக மேலும் 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்தது.

Vellore Corona Update
இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 ஆயிரத்து 640-க்கும் மேற்பட்டார் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை 210 பேர் உயிரிழந்துள்ளனர்.