தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடிபம்புடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் கைது

வேலூரில் அடிபம்புடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபு கைது செய்யப்பட்டார்.

அடிபம்புடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் கைது
அடிபம்புடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் கைது

By

Published : Aug 11, 2022, 3:17 PM IST

வேலூர்: மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு கட்ட பணிகள் நடந்து வருகிறது. அவ்வப்போது சாலையில் இருக்கும் பொருட்களை அகற்றாமல் அலட்சியமாக சாலை அமைக்கும் பணிகள் நடந்துள்ளன. இதனை தடுக்கும் வகையில் தொடர்புடைய ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதோடு அனைத்து ஒப்பந்ததாரர்களையும் அழைத்து ஆலோசனை வழங்கியது மாநகராட்சி நிர்வாகம்.

இந்நிலையில் மண்டலம் 2 சத்துவாச்சாரிக்குட்பட்ட வீரராகவபுரத்தில் தெருவோரம் இருந்த அடிபம்பை அகற்றாமல் கழிவு நீர் கால்வாய் தடுப்பு சுவர் கட்டப்பட்டது குறித்து நேற்று செய்தி வெளியானது. அதனையடுத்து சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவதாகவும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் சுஜாதா கூறியிருந்தார்.

இந்நிலையில் 2 ஆவது மண்டல உதவி ஆணையர் செந்தில்குமரன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சத்துவாச்சாரி காவல் துறையினர் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:75-வது சுதந்திர தின விழா: சென்னையில் 2வது அணிவகுப்பு ஒத்திகை

ABOUT THE AUTHOR

...view details