மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்ய வேலூர் அறநிலையத் துறை இணை ஆணையர் தனபால் உத்தரவிட்டார். இதற்காக காஞ்சிபுரம் அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து மேல்மருவத்தூர் கோயிலில் அறநிலையத் துறையின் உத்தரவை ஊழியர்களிடம் காண்பித்து அலுவலர்கள் ஆய்வு செய்ய முயன்றனர். ஆனால் ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், ஆய்வு செய்ய வந்த அலுவலர்களை கோயிலிலிருந்தும் வெளியேற்றினர். இதனால் ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி உதவி ஆணையர் ரமணி மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.