தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வேலூரில் தடை: மதுக்கூட உரிமையாளர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை - vellore district news in tamil

வேலூரில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடைவிதித்துள்ள மாவட்ட ஆட்சியர், இரவு 10 மணிக்குமேல், மதுபானங்கள் விற்கக் கூடாது கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்றும் மீறினால் உரிமம் ரத்துசெய்யப்படும் என்றும் ஹோட்டல், மதுக்கூட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

new year celebration vellore
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வேலூரில் தடை; மதுக்கூட உரிமையாளர்களுக்கு ஆட்சியர் விடுத்துள்ள எச்சரிக்கை

By

Published : Dec 31, 2020, 6:19 AM IST

வேலூர்:வேலூரில் கரோனா பரவலைத் தடுக்கும்பொருட்டு ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை இரவு 10 மணிக்கு நட்சத்திர ஹோட்டல், பிற ஹோட்டல்களில் இயங்கும் மதுக்கூடங்களைக் கட்டாயமாக மூட வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.

அவ்வாறு மது விற்றாலோ, கேளிக்கை நிகழ்ச்சி நடப்பதாகத் தெரியவந்தாலோ, மதுக் கூடத்தின் உரிமம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதோடு, உரிமம் ரத்துசெய்யும் நடவடிக்கையும், உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு: ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர்

ABOUT THE AUTHOR

...view details