உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை தற்காத்துக்கொள்ள கோவாக்சின் கோவிஷீல்டு என்ற தடுப்பூசி மருந்துகளை மத்திய சுகாதாரத்துறை அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர், முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பெரிதளவில் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில், வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறப்பு கரோனா தடுப்பூசி மையத்தில் அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தடுப்பூசி போட்டுக்கொண்டார். தொடர்ந்து 20 நிமிடங்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், "வேலூர் மாவட்டத்திற்கு 30 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசி வந்துள்ளது. தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக நான் தடுப்பூசி போட்டு கொண்டேன்.