தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவின்போது கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு கரோனா தடுப்புப உபகரணங்கள் அனுப்பும் பணி தொடங்கியது.
வேலூரில் வாக்குச் சாவடிகளுக்கு கரோனா உபகரணங்கள் அனுப்பும் பணி - வேலூரில் கரோனா உபகரணங்கள் அனுப்பும் பணி
வேலூர்: வாக்குப்பதிவின்போது கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக அந்தந்த தொகுதிகளுக்கு கரோனா உபகரணங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது.
முன்னதாக வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் ஒவ்வொரு வாக்குப் பதிவு மையத்திற்கும் தேவையான தெர்மல் ஸ்கேனர், சானிடைசர், பி.பி.இ. கிட், முகக்கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட 13 வகையான கரோனா தடுப்பு உபகரணங்களை அட்டைப் பெட்டைகளில் அடுக்கி வைக்கும் பணி நடைபெற்றது.
மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சண்முகசுந்தரம் அவற்றை பார்வையிட்டு வாக்குப் பதிவு மையங்களுக்கு அனுப்பும் பணியைத் தொடங்கி வைத்தார். கூடவே மாற்றுத்திறனாளி வாக்காளர்களை அழைத்துச் செல்லும் விதமாக குறிப்பிட்ட அளவிலான சக்கர நாற்காலிகளும் அனுப்பி வைக்கப்பட்டன.