தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழாவில் ஆட்சியர் சண்முகசுந்தரம் பங்கேற்பு! - வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்

வேலூர்: தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிறைவு நிகழ்ச்சியான இன்று ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார்.

ஆட்சியர் சண்முகசுந்தரம்

By

Published : Sep 27, 2019, 6:02 PM IST

நாடு முழுவதும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவுகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு போஷன் அபியான் திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநிலங்களிலுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை மூலம் அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்டு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்குவதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்று வருகிறது இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அங்கன்வாடி பணியாளர்கள் தினந்தோறும் ஊட்டச்சத்து உணவுகளைத் தயார் செய்து காட்சிப்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்குபெற்றார்

இந்த நிலையில் ஊட்டச்சத்து மாத விழாவின் நிறைவு நிகழ்ச்சி வேலூர் டவுன் ஹாலில் இன்று நடைபெற்றது. அதில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து விழாவில் அங்கன்வாடி பணியாளர்கள் தயார் செய்து வைத்திருந்த ஊட்டச்சத்து உணவுகளை பார்வையிட்டு சுவைத்துப் பார்த்தார் . பின்னர் விழாவுக்கு வந்த குழந்தைகளுக்கு பொம்மை உள்ளிட்ட பரிசுகளை வழங்கிய அவர், ஊட்டச்சத்து மாத விழாவில் சிறப்பாக பங்காற்றிய அங்கன்வாடி பணியாளர்கள், பொறுப்பாளர்களுக்கும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

மேலும் படிக்க: வேலூரில் பரவும் டெங்கு காய்ச்சல் மறைக்கப்படுகிறதா?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details