தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.790 கோடிக்கு ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடக்கம்!

வேலூர்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 790 கோடி மதிப்பில் பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

vellore collector inspect smart city work
வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு

By

Published : Jan 3, 2020, 10:04 PM IST

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை பழமை மாறாமல் பொலிவூட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தத் திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையின் அகழியை தூர்வாரும் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 29 இடங்களில் பணிகள் நடைபெற உள்ளன. இதில் ஒரு சில பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மொத்த மதிப்பீடு ஆயிரம் கோடி ஆகும். இதில் ரூ. 910 கோடிக்கு விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதில் ரூ. 790 கோடிக்கு பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை திட்டம் முக்கியமானதாக செயல்படுத்தப்படுகிறது.

ஸ்மார்ட் சாலைகள் புதிய பேருந்து நிலையத்தை சீரமைத்து பல அடுக்கு கார் பார்க்கிங் உள்ளிட்ட பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. வேலூர் கோட்டை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இங்கே அவர்களிடம் கலந்து ஆலோசித்து அவர்கள் என்னென்ன நிபந்தனைகள் விதிக்கிறார்கள் என்பதை கேட்டறிந்தோம். குறிப்பாக பழமை மாறாமல் வேலூர் கோட்டையை பொலிவூட்டும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி கோட்டை அகழி தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். பாதாள சாக்கடை திட்டம் நான்கு நிலைகளிலும், குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் இணைப்புக்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு பணிகள் முழுமையாக முடிந்த பிறகுதான் சாலைகள் சீரமைக்கப்படும்.

இதுபோன்ற பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது பொதுமக்களுக்கு சில இடையூறுகள் சிரமம் வரத்தான் செய்யும். பொதுமக்கள் அதை பொறுத்துக் கொள்ளவேண்டும். பணிகள் முடிந்த பிறகு எந்த ஒரு கழிவு நீரும் பாலாற்றில் கலக்காது. கோட்டையில் பொழுதுபோக்கு அம்சம் அதிகரிக்கும் வகையில் வாக்கிங் ட்ராக், ஆம்பியர் தியேட்டர், கேலரி உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளன’ என்று தெரிவித்தார். ஆய்வின்போது வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மாவட்ட ஆட்சியர் உடன் இருந்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு

இதையும் படிங்க:வாக்கு எண்ணும் பணிகள் தாமதம் - ஆட்சியர் கந்தசாமி நேரில் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details