வேலூர் மாவட்டம் அரியூர் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அரியூரைச் சேர்ந்த ராஜ்குமார் (37) (எ) எம்.எல்.எ. ராஜா, ராஜா (36) (எ) சேம்பர் ராஜா, அப்பு (31) (எ) ரோகித் குமார், ஊசூரைச் சேர்ந்த பல்சர் சுனில் (34), அணைக்கட்டைச் சேர்ந்த அப்பு (29) (எ) உமாமகேஸ்வரன், டீன் (23) (எ) லோகேஷ், காட்பாடியைச் சேர்ந்த ஆனந்தன் (24) ஆகிய ஏழு பேரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என ஆட்சியருக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பரிந்துரைத்தார்.
7 பேரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேலூர் ஆட்சியர் உத்தரவு! - vellore gundas act
வேலூர்: அரியூர் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஏழு பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
வேலூர்
அவரின் பரிந்துரையின்படி, இன்று (ஜன. 09) வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஏழு பேரையும் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.