வேலூர்:தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலகத்தினுள் ஐந்து கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கும் அறை கட்ட கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முடிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (டிச. 04) வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் திறந்துவைத்தார். இந்த வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பறையில் ஒன்பதாயிரத்து 320 பேலட் யூனிட், ஐந்தாயிரத்து 40 கண்ட்ரோல் யூனிட் மற்றும் ஐந்தாயிரத்து 40 வாக்குப்பதிவு இயந்திரங்கள் போன்வற்றைப் பாதுகாப்பாக வைக்கும் அளவிற்கு இட வசதியும், 3.9 மீட்டர் உயரமுள்ள வளாகமும் கட்டப்பட்டுள்ளது.