வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே எருக்கம்பட்டி கிராமத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது.
தேவாலயத்தில் மீட்கப்பட்ட குழந்தை இதைக் கவனித்த பொதுமக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். பின்னர் அந்தக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்து பராமரித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தேவாலயத்தில் மீட்கப்பட்ட அந்த குழந்தையை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், திருப்பத்தூர் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் சேர்த்துவிட்டார். மேலும் அந்த குழந்தைக்கு 'தேன்மொழி’ என்று அழகிய தமிழ்ப் பெயரைச் சூட்டினார். இது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
குழந்தைக்குப் பெயர் சூட்டிய மாவட்ட ஆட்சியர் வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இதுபோன்ற, மூன்று பெண் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதையும் படியுங்க: 6 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை - போலீஸ் விசாரணை