வேலூர்: காட்பாடியை அடுத்த லத்தேரியில் இன்று ஏற்பட்ட பட்டாசு கடை தீ விபத்தைத் தொடர்ந்து, அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மாவட்டத்தின் அனைத்து வருவாய், காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கும் கீழ்கண்ட வழிமுறைகளை வழங்கி உள்ளார்.
அவை பின்வருமாறு:
- அனைத்து பட்டாசு கடைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட வேண்டும்.
- அனைத்து தீ பாதுகாப்பு விதிமுறைகளும், உரிமம் சார்ந்த நிபந்தனைகளும் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்.
- குழந்தைகள் மற்றும் கடை சாராத நபர்களை பட்டாசு கடைகளுக்குள் அனுமதிக்கக்கூடாது.
- பட்டாசு கடைக்கான உரிமம் வைத்திருப்பவர்கள் ஜூலை 30ஆம் தேதி (கோடை காலம் முடிவடையும் வரை) வரை புதிதாக பட்டாசுகள் கொள்முதல் செய்யக்கூடாது. தற்போது கையில் இருக்கக்கூடிய இருப்புகளை மட்டும் விற்பனை செய்து கொள்ள வேண்டும்.
- இருப்பில் இருக்கும் பட்டாசுகளில் அதிகமான சேதத்தை ஏற்படுத்த கூடியவற்றை கடையில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும்.
- மின் கம்பங்களை மீண்டும் சரி பார்க்க வேண்டும்.
- காவல் துறை, வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் இணைந்து நாளை முதல் அனைத்து பட்டாசு கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
- கிராமம்/ நகரத்தின் மத்தியில் உள்ள பட்டாசு கடைகளை புறநகர் பகுதிகளில் மாற்ற ஆவண செய்ய வேண்டும்.
- பட்டாசு கடைகளுக்கு செல்லக்கூடிய சாலைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்கள் செல்ல கூடிய அளவிற்கு போதிய அகலம் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.
- இவை அனைத்தையும் சரி பார்த்து வரும் வெள்ளிக்கிழமைக்குள்(ஏப்ரல். 23) அந்தந்த கோட்டாட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.