தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மாணவர்கள் விருப்பமான துறைகளைத் தேர்வு செய்ய பெற்றோர்கள் அனுமதியுங்கள்' -  வேலூர் மாவட்ட ஆட்சியர்! - வேலூர்

வேலூர் : மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளைத் தேர்வு செய்ய பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் கூறினார்.

collector advised

By

Published : Nov 7, 2019, 11:42 PM IST

வேலூர் மாவட்டம், காட்பாடியில் பள்ளி கல்வித் துறையின் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட கல்வி அலுவலர் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த கையேட்டினை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், 'மாணவர்கள் மீது பெற்றோர்கள் இந்த துறைக்கு தான் செல்ல வேண்டுமென எதிர் காலத்தை திணிக்கக் கூடாது, அவர்களே துறைகளை தேர்வு செய்து கொள்ள வழிவிட வேண்டும். இன்றைக்கு வேளாண் துறையில் அதிக இளைஞர்கள் வந்து ஆர்வமுடன் சாதித்து வருகின்றனர். நீங்களும் வேளாண்மை சார்ந்த படிப்புகளை படித்து சாதிக்க வேண்டும். சாதி வேற்றுமைகள் அக்காலத்தில் உயர்கல்வியிலும் இருந்து வந்தது.

உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

ஆனால், தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது. ஆகவே நீங்கள் உங்களுக்கு விருப்பமான துறைகளை நீங்களே தேர்வு செய்து, அதில் படித்து உயர்ந்து சாதிக்க வேண்டும்' என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

வேலூர் மாநகராட்சி மண்டல அலுவலர்கள் இடமாற்றம்

ABOUT THE AUTHOR

...view details