வேலூர்: வேலூர் மத்திய சிறையின் டிஐஜியாக இருப்பவர் ஜெயபாரதி; இவரது கணவர் முருகன். டாஸ்மாக்கில் தென் மாவட்டங்களுக்கான மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது வாடகை வீட்டிலும், வேளச்சேரி, அயனாவரம், அமைந்தக்கரை, ஃபீனிக்ஸ் மற்றும் அல்ஸா மால் ஆகிய இடங்களில் உள்ள எலைட் டாஸ்மாக்களிலும் (Elite Tasmac) சென்னை லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
வேலூர் சிறைத்துறை டிஐஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! - டிஐஜி ஜெயபாரதி
14:23 December 16
வேலூர் மத்திய சிறை டிஐஜி வீட்டில், இரண்டரை மணி நேரம் நடந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில். இன்று (டிச.16) வேலூர் தொரப்பாடியில் உள்ள முருகனின் மனைவி டிஐஜி ஜெயபாரதியின் அரசாங்க குடியிருப்பிலும், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி ஹேம சித்ரா தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் எவ்விதமான ஆவணமோ, பணமோ, நகையோ கைப்பற்றப்படவில்லை என்று லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு தமிழ்நாடு வருகை