வேலூர் மாவட்டம், செதுவாலை இந்திரா நகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜி (27). இவர் தனது கார் மூலம் வேலூர் வந்துவிட்டு மீண்டும் அதே காரில் மது அருந்திவிட்டு செதுவாலை நோக்கி தனது வீட்டிற்கு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகமாக ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது கொணவட்டம் தேவி நகர் பகுதியில் சென்றபோது, தன் கட்டுப்பாட்டை இழந்த ராஜி, தேசிய நெடுஞ்சாலையின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு விபத்து ஏற்ப்பட்டது. அப்போது, ஏழுமலை என்பவரின் வீட்டிற்கு அருகில் கார் தலைக்குப்புற உருண்டு விழுந்ததில் ராஜி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.