வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள வரதலாம்பட்டு கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது. அதற்காக ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் வரவழைக்கப்பட்டன.
அனைத்து காளைகளும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.
அதில், வாடிவாசலின் பந்தய தொலைவை குறைந்த நேரத்தில் எட்டிய காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 70 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் இதையும் படிங்க:கோயில் திருவிழா முன்னிட்டு எருது விடும் விழா