தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு: தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டம்! - தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டம்

சேலம்: டெல்லியில் 18ஆவது நாளாக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தமிழ் புலிகள் கட்சியினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டம்!
தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டம்!

By

Published : Dec 14, 2020, 6:23 PM IST

மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ் புலிகள் கட்சியினரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

சேலம் மற்றும் வேலூர் காட்பாடி ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டம்!

இந்தப் போராட்டங்களில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. காட்பாடி ரயில்வே சந்திப்பில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த 10 பேர் தடுத்து நிறுத்தி காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு: மனிதநேய மக்கள் கட்சியனர் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details