வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் ஒருங்கிணைந்த வேலூர் ஆவின் நிறுவன பொதுமேலாளராக கோதண்டராமன் பணிபுரிந்து வந்தார். இந்த நிறுவனத்தின் மூலம் நாள்தோறும் 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 3 லட்சம் லிட்டர் பால் தினமும் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள 2 லட்சம் லிட்டர் பாலில், 1.70 லட்சம் லிட்டர் பால் வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
ஆவின் நிறுவன மோசடி: வேலூர் பொதுமேலாளர் சஸ்பெண்ட்!
வேலூர்: வேலூர் ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனையில் நடந்த மோசடியில் ஈடுபட்ட பொதுமேலாளர் கோதண்டராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 30 ஆயிரம் லிட்டர் பால் மோர், தயிர், ஐஸ்கிரீம், லெஸ்சி உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கான உரிய ஆவணங்களை தணிக்கையின்போது சமர்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நாள்தோறும் 30 ஆயிரம் லிட்டர் பால் பல்வேறு வகைக்காக பயன்படுத்தியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பது தணிக்கையில் தெரிய வந்தது.
இது குறித்து சட்டப்பேரவையில் தற்போது நடந்து வரும் மானிய கோரிக்கையின்போது தணிக்கை துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில், வேலூர் ஆவின் பொதுமேலாளர் கோதண்டராமனை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.