நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருசமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலின்போது, ஒருதரப்பினர் வேதாரண்யம் காவல் நிலையம் அருகில் இருந்த அம்பேத்கர் சிலையை உடைத்தனர். இதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விசிக-வினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து ரயில் மறியல்! - vck protest in arakkonam
வேலூர்: வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து விசிக-வினர் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
![அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து ரயில் மறியல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4252586-thumbnail-3x2-protest.jpg)
vck Protest against the demolition of Ambedkar statue
ரயில் மறியல்
இந்நிலையில் வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் விசிக-வினர் சாலை மறியலில் ஈடுபட்டு சிலை உடைப்பில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர் . மேலும், அரக்கோணம் ரயில் நிலையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் விசிகவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.