நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பற்றி அவதூறாகப் பதிவிட்டு வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் பிரிவினர் மனு அளித்தனர்.
காயத்ரி ரகுராம் மீது விசிகவினர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு! - விசிக கட்சியினர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு
வேலூர்: திருமாவளவன் குறித்து ட்விட்டரில் அவதூறாகப் பதிவிட்டதாக காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசிகவினர் மனு அளித்தனர்.
மேலும், காயத்ரி ரகுராமின் பதிவுகள், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்று தெரிந்தே மீண்டும் மீண்டும் இழிவான சொற்களைப் பயன்படுத்தி வருகிறார். அதனால் காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் மலர்கொடி தலைமையில் மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையும் படிங்க... 'நீதி வேண்டும்... நீதி வேண்டும்... ஃபாத்திமாவுக்கு நீதி வேண்டும்!'