வேலூர்:விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில், “வெல்லும் ஜனநாயகம்” மாநாட்டிற்காக எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் பெயர்கள் மீது தார் ஊற்றி அழித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
டிசம்பர் 23 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டிற்காக, வேலூர் மாவட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக, மாவட்டத்தின் பல்வேறு கிராமப் பகுதி, தேசிய நெடுஞ்சாலை பகுதி போன்ற 500க்கும் மேற்பட்ட இடங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட, ஸ்ரீபுரத்திலிருந்து பெண்ணாத்தூர் செல்லும் காட்டுப்புத்தூர் என்ற பகுதியில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெயர்கள் மீது மர்ம நபர்கள் தார் ஊற்றி அழித்துள்ளனர்.
இதையும் படிங்க:உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து; முதன்முறையாக சூடான உணவை அனுப்பும் மீட்புப்படை.. காரணம் என்ன?
இது குறித்து, தகவல் அறிந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கோவேந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வேலூர் தாலுகா காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுவர் விளம்பரங்கள் மீது தாறு ஊற்றிய மர்ம நபர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால், கட்சியினர் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
மேலும், இதுபோன்று கடந்த ஒரு வாரங்கள் முன்பாக, துத்தி பட்டு கிராமத்தில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் மீது தாறு ஊற்றி அழித்ததை கண்டித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, தற்பொழுது சுவர் விளம்பரங்கள் எழுதும் இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் மீது தார் ஊற்றி அழித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கட்சியினர் ஒன்று கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:தென்காசி அருகே 22 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் சுப்பிரமணியபுரம்.. பொதுமக்கள் போராட்டம்!