வேலூர்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக சங்கத்தினர் அரக்கோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக “நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 13ஆம் தேதி அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக - விஏஓ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! - Vellore news
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் அரக்கோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி விஏஓ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
இந்த நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் நேற்று (மார்ச் 24) ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரக்கோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் அரசுப் பள்ளிகள் அரசப் பள்ளியாக மாறும் - இறையன்பு