வேலூர் மாவட்டம் வாணியம்பாடியிலுள்ள ஊசித்தெருவில், மின்கம்பம் ஒன்றில் நேற்று இரவு சுமார் 10.45 மணியளவில் மின் கசிவு ஏற்பட்டது. கம்பத்தின் மின்சாரக்கம்பிகளில் தீப்பொறி பெருமளவில் பரவத் தொடங்கியதும், அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக மின்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து, உடனடியாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நேரவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும் இதுபோல் இனி நடக்காமலிருக்க, மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.