தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டினுள் புகுந்த 3 கொடிய விஷமுள்ள பாம்புகள் - Vaniyambadi Snake Caught

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வீட்டில் 3 கொடிய விஷமுள்ள பாம்புகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி வீட்டினுள் புகுந்த 3 கொடிய விஷமுள்ள பாம்புகள் வீட்டினுள் புகுந்த 3 கொடிய விஷமுள்ள பாம்புகள் வாணியம்பாடி பாம்பு பிடிப்பு Vaniyambadi Snake Caught Snake Caught
Vaniyambadi Snake Caught

By

Published : Jan 19, 2020, 12:03 AM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள லாலா ஏரி பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய வீட்டில் இன்று மாலை வீட்டின் அருகேயுள்ள வயல்வெளியில் இருந்து 3 கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்புகள் வீட்டிற்குள் புகுந்துள்ளன.

அதைக் கண்டு அச்சமடைந்த சிறுவர்கள், பெண்கள் அலறியடித்து வீட்டிற்கு வெளியே வந்து கூச்சலிட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்து அந்த மூன்று பாம்புகளையும் லாவகமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் வீட்டில் 3 கொடிய விஷமுள்ள பாம்புகள் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிடிபட்ட பாம்புகள்

ABOUT THE AUTHOR

...view details