வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் முத்தமிழ் மன்ற அறக்கட்டளைச் செயலமைப்பு சார்பில் 27 ஆம் ஆண்டு இலக்கியத் தாரகை திருவிழா நடைப்பெற்றது. "வல்லமை தாராயோ" என்ற தலைப்பில் சகாயம் ஐஏஎஸ் மற்றும் நீதியரசர் மகாதேவன் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
இலக்கியத் தாரகை திருவிழாவில் குவிந்த தமிழ் ஆர்வலர்கள்! - 27ஆம் ஆண்டு
வேலூர்: வாணியம்பாடியில் முத்தமிழ் மன்றம் சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு இலக்கியத் தாரகை திருவிழாவில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பேச்சாளர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பரதநாட்டியம், திருவாசக சொற்பொழிவுகள் நடைப்பெற்றன. மேலும் சொல்லரங்கத்தில் தமிழின் உயர்வு பற்றி முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சிறப்புரை ஆற்றினார். இன்றைய வாழ்வில் சிக்கல்களுக்கு இதிகாசத்தில் தீர்வு உண்டா என்ற தலைப்பில் பாரதி பாஸ்கர் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைப்பெற்றது.
தொடர்ந்து, இசைத்தமிழரங்கம், பொழியரங்கம், உரையரங்கம், பாட்டரங்கம், உள்ளொளி அரங்கம், இசையரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், தமிழ் அறிஞர்கள் பங்கேற்று தமிழின் சிறப்பை மக்களுக்கு எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பலர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.