வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் பகுதியில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் முன்னால் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ஜைத் அஃப்ஃபான் (17) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற இர்ஃபான் என்பவர் கவலைக்கிடமான நிலையில், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.