தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சி.சி.டிவி காட்சி மூலம் திருடனைத் தேடும் போலீஸ்! - cellphone theft from open shop

வேலூர்: வாணியம்பாடியிலுள்ள ஒரு செல்போன் கடையில் வாலிபர் ஒருவர் செல்போன் திருடிச் செல்லும் காட்சி அங்குள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vaniyambadi cellphone theft

By

Published : Nov 8, 2019, 9:10 AM IST

Updated : Nov 8, 2019, 9:34 AM IST

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல் சாலையில் கடந்த பல ஆண்டுகளாக சரன்சிங் என்பவர் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூடுதலாக கடையின் அருகில் செல்போன் கடையை திறந்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை கடையில் வேலை செய்யும் ஊழியர் வாடிக்கையாளர் ஒருவரை அங்கேயே அமரவைத்து மற்றொரு வாடிக்கையாளருக்கு வேறு பொருட்களை கொண்டுவர உள்ளே சென்றுள்ளார். அப்போது வெளியில் இருந்து ஒரு வாலிபர் திடீரென கடைக்குள் நுழைந்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு புதிய செல்போனை எடுத்துச் சென்றுவிட்டார்.

உள்ளிருந்து வெளியில் வந்த கடையின் ஊழியர் புதிய நபர் ஒருவர் உள்ளே வந்து வேகமாக வெளியில் செல்வதை பார்த்து சந்தேகமடைந்து சி.சி.டிவி கேமராவை பார்த்தபோது அவர் செல்போன் திருடிச்சென்றது தெரியவந்தது.

சி.சி.டிவி காட்சி

கடையின் உரிமையாளர் சரன் சிங் இந்தச் சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சி.சி.டிவி பதிவை வைத்து செல்போன் திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'காஷ்மீர் மக்களை அச்சுறுத்தும் பிரிவினைவாதிகள்...!'

Last Updated : Nov 8, 2019, 9:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details