வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடியில் பேருந்து நிலையம் அருகில் திருப்பத்தூரிலிருந்து வேலூர் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஏதிர்பாராதவிதமாக என்ஜினின் கீழ்ப்பகுதியில் தீ பிடித்து எரிந்ததால் பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர்.
தீ பிடித்த தனியார் பேருந்து.. பயணிகள் அலறியடித்து ஒட்டம்..! - bus fire accident
வேலூர்: வாணியம்பாடியில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் தீ பிடித்த தனியார் பேருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீ பிடித்த தனியார் பேருந்து
இதனையடுத்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இச்சம்பவம் பெட்ரோல் பங்க் முன் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.