தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேன் கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம்! - thiruvallur

திருவள்ளூர்: திருத்தணி அருகே நிலை தடுமாறி வேன் கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

van accident

By

Published : Jun 3, 2019, 4:33 PM IST

திருத்தணி ஆர்கே பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பூந்தமல்லியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்ல தினமும் காலையில் வேன் வரும். இன்றும் அதேபோல வேன் ஆட்களை ஏற்றிச் சென்றது.

திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமச்சேரி கிராமம் அருகே செல்லும்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. அதில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். 5 பேர் மட்டும் பலத்த காயமடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேன் கவிழ்ந்து விபத்து

ABOUT THE AUTHOR

...view details