வேலூர்:குடியாத்தம், கொண்ட சமுத்திரம் பகுதியில் பலமனேரி சாலையில் கல்பனா என்பவர் தையல் வேலை செய்து வருகிறார். இவர் சிறுக சிறுக சேகரித்த பணத்தில் தனது மகளுக்காக ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வைரக்கம்மலை வாங்கி தீபாவளி நோன்புக்குப் பூஜை செய்வதற்காக சாமி படத்தின் முன் வைத்துள்ளார்.
இன்று(அக்.26) காலை பழைய பூக்களுடன் சேர்ந்து வைர கம்மலையும் சேர்த்து அவரது மகள் குப்பையில் கொட்டியுள்ளார். இதனையடுத்து குடியாத்தம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அந்த குப்பையைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
இதனிடையே சாமி அறையில் சென்று பார்த்த கல்பனா வைர கம்மல் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தனது மகளிடம் கேட்ட பொழுது அவர் தற்போது தான் வீட்டிலிருந்த குப்பையை நகராட்சிக் குப்பை வண்டியில் கொட்டியதாகத் தெரிவித்தார்.