வேலூர் மாவட்டம் மக்களவைத் தேர்தல் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஆம்பூர் பைபாஸ் சாலையில் வைகோ பரப்புரை மேற்கொண்டார்.
இதில் பேசிய வைகோ, மத்தியில் ஆட்சிபுரியும் மோடி அரசு இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என தெரிவித்தும் இரண்டு ஆயிரம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு அளிக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க நேரமில்லாத மோடிக்கு ஊர் சுற்ற நேரமுள்ளதா எனவும் வைகோ கேள்வி எழுப்பினார்.