தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டப்பகலில் 3 பவுன் நகை, 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டு! - thirupur crime news

திருப்பத்தூர்: பட்டப்பகலில் வியாபாரியின் வீட்டில் மூன்று பவுன் நகை, 500 கிராம் வெள்ளிப் பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

unidentified persons stolened in thirupathur
unidentified persons stolened in thirupathur

By

Published : Feb 1, 2020, 3:28 PM IST

திருப்பத்தூர் அடுத்த சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஜெய்சங்கர். இவரது மனைவி காயத்ரி தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார். இவர் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டின் அருகிலுள்ள பெட்டியில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

இந்நிலையில், காயத்ரி வீட்டிற்கு திரும்புகையில், வீடு திறக்கப்பட்டிருந்தது. இதனால், சந்தேகமடைந்த அவர், வீட்டிலுள்ள பொருள்கள் ஏதேனும் திருடு போயுள்ளனவா எனச் சோதனை செய்துள்ளார்.

அப்போது பீரோவிலிருந்த மூன்று சவரன் தங்க நகைகள், 500 கிராம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

திருப்பத்தூரில் வியாபாரியின் வீட்டில்திருட்டு

இதையடுத்து, திருப்பத்தூர் நகர காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details