தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூர் அருகே பூட்டியிருந்த வீட்டில் தங்க நகை கொள்ளை - aambur theft

வேலூர்: ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 8 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

theft

By

Published : May 14, 2019, 4:01 PM IST

வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோமளா. கணவரை இழந்து தனியாக வாழும் இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், கோமளா தன் உறவினரின் நிகழச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் பெங்களூருக்கு சென்றுள்ளார். இதனையறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், கோமளாவின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளனர். பின்னர் அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கொள்ளையடிக்கப்ட்ட வீடு

இந்நிலையில் நேற்று மாலை கோமளா, பெங்களூருவில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அவர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்தேறிய இக்கொள்ளைச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details