வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த ஆந்திர எல்லையான கிறிஸ்டியான் பேட்டையில் நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளா பதிவெண் கொண்ட கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இரண்டு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து நிலை கண்காணிப்புக் குழுவினர் அவரிடமிருந்து பணத்தைப் பறிமுதல்செய்து, காட்பாடி தேர்தல் அலுவலர் புண்ணியகோட்டியிடம் ஒப்படைத்தனர்.
மேலும் காரில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த செவூகாரன் ஜோசப் ஆண்டனி எனத் தெரியவந்தது.
காட்பாடி அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல்! - பணம் பறிமுதல்
தமிழ்நாடு ஆந்திர எல்லையில் கேரள பதிவெண் கொண்ட காரில் இருந்து, உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு லட்சத்து 14 ஆயிரம் ரூபாயை நிலை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல்செய்தனர்.
பணம் பறிமுதல்
அவர் தன் குடும்பத்தினருடன் திருப்பதி சென்றுவிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தன் மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் கேரளாவின் எர்ணாகுளம் செல்ல இருப்பதாக நிலை கண்காணிப்புக் குழுவினரிடம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்!