வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (25). இவர் கடந்த 2ஆம் தேதி தனது வீட்டின் முன்பு யமஹா R15 என்ற தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது வாகனம் திருடுபோயுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சுரேஷ்குமார் வீட்டின் எதிர் வீட்டில் இருந்த CCTV பதிவை காவல்துறையினர் ஆராய்ந்தபோது அதிகாலை 4.30 மணி அளவில் அடையாளம் தொரியாத நபர் மூன்று பேர் இருசக்கர வாகனத்தை திருடும் காட்சி பதிவாகியிருந்தது.
"திருடினால் இனிமே இப்படிதான் பிடிப்போம்" - சிசிடிவியை வைத்து கொள்ளையனை லாக் செய்த போலீஸார்! - யமஹா R15
வேலூர்: காட்பாடி அருகே இருசக்கர வாகனத்தை திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சிகள் வைத்து காவல்துறையினர் கைதுசெய்தனர்.
cctv
இதையடுத்து சிசிடிவி ஆதாரங்களை வைத்து காவல்துறையினர் வாகனத்தை திருடிய மூன்று பேரை தேடி வந்தனர். இந்நிலையில், பழைய காட்பாடி பகுதியில் சுற்றித்திரிந்த முள்ளிபாளையத்தைச் சேர்ந்த சரண்ராஜ் (29) என்ற நபரை சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில், இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து சரண்ராஜை காவல்துறையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடிவருகின்றனர்.