தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனம்-கார் மோதல் - பெண் பார்க்க சென்றவர் உட்பட இருவர் பலி - பெண்பார்க்க சென்றவர் உள்பட இருவர் பலி

வேலூர்: பெண் பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்

By

Published : Sep 22, 2019, 11:11 PM IST

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கம்மகிருஷ்ணபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு நாட்றாம்பள்ளி பகுதியில் பெண் பார்த்துவிட்டு பெருமாள், அவரது உறவினர்களான சாமிநாதன் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பணுர் அருகே வந்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கொண்டிருந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டதில் பெருமாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் முருகன், சாமிநாதன் ஆகியோர் பலத்த காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

விபத்தை ஏற்படுத்திய கார்

இதில் சாமிநாதனின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details