வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் வசித்து வருபவர் குமரேசன். இவர், நேற்று மலை தனது நிலத்தில் முள்ளங்கி அறுவடை செய்துவிட்டு வீடு திரும்பியபோது, வழியில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளன.
ஆம்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து தம்பதியினர் படுகாயம் - வேலூர்
வேலூர்: ஆம்பூர் அருகே நாட்டுவெடிகுண்டு வெடித்ததில் கணவன், மனைவி ஆகியோர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிற்குள் வெடித்த நாட்டு வெடிகுண்டு!
அதை எடுத்துச் சென்ற அவர், வீட்டில் வைத்து பிரித்து பார்த்த போது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இதில் அவருக்கு, அவரது மனைவி கவிதாவும் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.