வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் திடீரென்று குறைதீர்ப்பு முகாம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சிவன் மற்றும் ராமர் வேடம் அணிந்த 2 நபர்கள் மனு அளிப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், முகாம் ரத்து செய்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
'இந்துக்களை இழிவாகப் பேசும் திருமா...' - கடவுளாக மாறி புகார் அளித்த இருவர்! - two people complaint for arrest thol thirumavalavan
வேலூர்: இந்து மதத்தையும் இந்து கடவுளையும் இழிவாகப் பேசும் திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி, கடவுள் வேடத்தில் இரண்டு நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
!['இந்துக்களை இழிவாகப் பேசும் திருமா...' - கடவுளாக மாறி புகார் அளித்த இருவர்! arrest thol thirumavalavan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5248497-thumbnail-3x2-ice.jpg)
அவர்கள் கொண்டு வந்த மனுவில், " விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தொடர்ச்சியாக வேறு மத விழாவிற்குச் சென்று, இந்து கடவுளையும் இந்து கலாசாரத்தையும் இழிவுபடுத்தி முகநூல் வாயிலாக பேசி வருகிறார். தமிழ்நாட்டில் கலவரம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பேசி வரும் திருமாவளவன், பின்னால் பயங்கரவாதிகள் இருப்பதாக கருதுகிறோம். அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தடை செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரட்டையர்களை விஷம் அருந்தச் செய்து, தாயும் தற்கொலை முயற்சி!
TAGGED:
Vellore