வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த கீழ்விலாச்சூர் பகுதியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியைக் காணவில்லை என அவரது பெற்றோர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் கே.வி.குப்பம் காவல் துறையினர் மாணவியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
பள்ளி மாணவி கடத்தல்: ராணுவ வீரர் உட்பட இருவர் கைது - ராணுவவீரர் உட்பட இருவர் கைது
வேலூர்: கே.வி.குப்பத்தில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவியைக் கடத்தியதாக ராணுவ வீரர் உட்பட 2 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் முத்துக்குமரன் (24) என்பவர் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கே.வி.குப்பம் அருகே முத்துக்குமரன் மற்றும் கடத்தப்பட்டதாக கூறப்படும் பள்ளி மாணவி ஆகிய இருவரையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதன்படி, மாணவியை கடத்த முத்துக்குமாருக்கு உதவியதாக ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரான வினோத்குமார் (25) என்பவரையும் பிடித்த கே.வி.குப்பம் காவல் துறையினர் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.