வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (22). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர்களான ராஜவேல் (30) மற்றும் கதிர்வேலுக்கும் இடையே நீண்ட நாட்களாக இடம் தகராறு இருந்துள்ளது.
இடத்தகராறில் வழக்கறிஞர்களுக்கு அரிவாள் வெட்டு!
வேலூர்: திருப்பத்தூர் அருகே இடத் தகறாரில் வழக்கறிஞர்களை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று காலை ராஜகோபால் தனது வீட்டின் அருகில் இருக்கும் புளியமரத்தை வெட்டியுள்ளார். இதை அறிந்த வழக்கறிஞர்கள் இருவரும் அந்த புளியமரம் தங்களுக்கு தான் சொந்தம் எனக் கூறி ராஜகோபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதைத் தொடர்ந்து தான் வைத்திருந்த கத்தியால் வழக்கறிஞர்கள் இருவரையும் ராஜகோபால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.