வேலூர்மாவட்டத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட போலீசாருக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட ரோந்து வாகனம், மாவட்ட காவல் துறையால் வழங்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால், ரோந்து வாகனம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்(எஸ்.பி) அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.
இந்த நிலையில், வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு ரோந்து செல்லும், வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார் மற்றும் குற்றப்பிரிவு காவலர் ஐயப்பன் ஆகியோர் சென்ற இரவு ரோந்து வாகனத்தில் (டூ வீலர்) ஜிபிஎஸ் (GPS) சிக்னல் கட் ஆகியுள்ளது.