தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் அரசு ஊழியர்கள் இருவர் பலி! - AMBUR GOVERNMENT HOSPITAL

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அரசு ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் அரசு ஊழியர்கள் இருவர் பலி
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் அரசு ஊழியர்கள் இருவர் பலி

By

Published : Nov 20, 2022, 3:52 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர், இதயகுமார். இவர் ஆம்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் ஆம்பூரிலிருந்து பேர்ணாம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தபோது அயிதம்பட்டு கூட்டுச்சாலை பகுதியில் எதிரே வந்த அயிதம்பட்டு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் மூர்த்தி என்பவரது இருசக்கர வாகனத்தின் மீது இதயகுமாரின் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் மீட்ட அப்பகுதி மக்கள் அவர்களை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மூர்த்தி வேலூர் அரசு கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி மூர்த்தி உயிரிழந்துள்ளார்.

இதயகுமார் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி இதயகுமாரும் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவ்விபத்து குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பயணியை தள்ளிவிட்ட அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details