வேலூர் மாவட்டம் ஆம்பூர் நூருல்லாபேட்டை பகுதியை சேர்ந்த அஷ்பாக், அவரது மனைவி ஷாயிகா மற்றும் அஷ்பாக் சகோதரர்கள் மூன்று பேர் சேர்ந்து ராணிப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் தோல் தொழிற்சாலை பெயரை போலியாக தயார் செய்துள்ளனர். அந்த தொழிற்சாலைக்கு கேஹச்ஈ(KHE) என்ற பெயரை வைத்துள்ளனர்.
அதையடுத்து ஆம்பூரை சேர்ந்த ஷபீக் அகமது, வாணியம்பாடியை சேர்ந்த ஐந்து தோல் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் தனித்தனியாக 2 லட்சம், 1 லட்சம் ரூபாய்க்கு தோல் வாங்கிக்கொண்டு பணம் தருவதாக ஏமாற்றி வந்துள்ளார் அஷ்பாக்.
மோசடி செய்த கணவன் மனைவி கைது! பின்னர், கடந்த 10 மாதங்களாக தொழிற்சாலை உரிமையாளர்கள் ஆறு பேர் ஒன்றன் பின் ஒன்றாக மாவட்ட குற்றவியல் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரூ. 10 கோடிக்கு தோல் பெற்றுக் கொண்டு அந்த கும்பல் பணம் தராமல் ஏமாற்றியுள்ளதாக தெரியவந்தது.
இதன் பேரில் அஷ்பாக் மற்றும் அவரது மனைவி இருவரையும் கைதுசெய்த மாவட்ட குற்றவியல் போலீசார், ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கதிரவன் முன் அவர்களை ஆஜர்படுத்தி பின் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அஷ்பாக்கின் சகோதரர்கள் மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.