வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் காஜா ஓட்டல் எனும் பிரியாணிகடை நடத்தி வருபவர் கலிம். கோனாமேடு பகுதியியைச் சேர்ந்தவர்கள் ஜெய்பாரத், செல்வபிரபு. இவர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநர்களாக உள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு இருவரும் குடிபோதையில் சாப்பிடுவதற்கு காஜா ஓட்டலுக்கு சென்றனர்.
அப்போது, கடை ஊழியரிடம் பிரியாணி கேட்டு தகராறு செய்துள்ளனர். அதற்கு ஊழியர் பணத்தை கொடுத்து பிரியாணியை பெற்று கொள்ளுமாறு கூறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஊழியரையும். கலீமையும் பலமாகத் தாக்கினர்.