வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராமாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டார். இவருக்கு பணி ஆணை வழங்க இருந்த நிலையில், திடீரென அவருக்கு கொடுக்க வேண்டிய வேலையை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்பின் இது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் சதீஷ்குமார் இதுகுறித்து கேட்டபோது, நான்கு லட்சம் ரூபாய் பணி ஆணை வழங்கப்படும், இல்லையெனில் இதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடம் தனக்கு வழங்கவேண்டிய அரசுப் பணியை வழங்க தொடர்ந்து மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லாததால் அந்த நபர், அவருடைய மனைவி, பிள்ளைகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
அரசு வேலை கிடைக்காததால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்த நபரால் பரபரப்பு இதனைக் கண்ட காவல் துறையினர், உடனடியாக அவர் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க:இளம்பெண்ணை கடத்த முயற்சி - ஆட்டோ ஓட்டுநருக்கு விருந்து வைத்த பொதுமக்கள்!