வேலூர் மாவட்ட மணல் கடத்தல் தடுப்புப்பிரிவு தனிப்படை காவல்துறையினர், கடந்த 17ஆம் தேதி அதிகாலை காட்பாடி அடுத்த கரசமங்கலம் கூட்ரோடு சாலை அருகே பாலாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க ரோந்து சென்றனர்.
அப்போது எதிரே கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, தனிப்படை காவல்துறையினர் சென்ற கார் மீது மோதிய விபத்தில் மணல் கடத்தல் தடுப்புப் பிரிவை சேர்ந்த தனிப்படை துணை ஆய்வாளர் ராஜா, காவலர்கள் ராஜிவ் காந்தி, சுரேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.