வேலூர் ரங்காபுரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில், எல்பிஎஃப், சிஐடியு, எஐடியுசி போன்ற பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்! - Transport workers protest
வேலூர்: அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று(நவ.10) முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
protest
இந்தப் போராட்டத்தில், 14ஆவது ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்; 20 விழுக்காடு போனஸ் வழங்கிட வேண்டும்; பண்டிகை முன்பணம் 10ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும்; நிர்வாகம் செய்த தொழிலாளர் பணம் எட்டாயிரம் கோடியைத் திருப்பி தர வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதையும் படிங்க:நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர்!